ஓட்டமாவடி- சிராஜிய்யாவில் கிழக்கின் முதலாவது பந்து பெட்மின்டன் மைதானம் திறப்பு விழாவும் மாவட்ட மட்ட பந்து பெட்மின்டன் சுற்றுப்போட்டியும் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 December 2023

ஓட்டமாவடி- சிராஜிய்யாவில் கிழக்கின் முதலாவது பந்து பெட்மின்டன் மைதானம் திறப்பு விழாவும் மாவட்ட மட்ட பந்து பெட்மின்டன் சுற்றுப்போட்டியும் !


கல்குடா அஸ்பக் அகடமியும் (Asspek Acadamy) சிறாஜ் அரபுக் கல்லூரி மஜ்மா நகர் ஓட்டமாவடி சிராஜ் பந்து பெட்மிண்டன் கழகமும் (Siraj Ball Badminton Club) இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் மாவட்ட மட்ட சுற்றுப்போட்டியும் கிழக்கிம் முதலாவது மைதானத்திறப்பு விழாவும் சீருடை அறிமுக நிகழ்வும் நேற்று 08.12.2023ம் திகதி வெள்ளிக்கிழமை சிராஜிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் விமர்சையாக இடம்பெற்றது.



வட கிழக்கு மாகாண பந்து பெட்மின்டன் சங்கத்தின் இணைப்பாளரும் கல்குடா அஸ்பக் அகடமியின் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.இர்பான் (SLTS) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப்பணிப்பாளர் யூ.சிவராசா கலந்து கொண்டு சிறப்பித்தார்.



அத்துடன், சிராஜ் அரபுக்கல்லூரியின் முதல்வர் ஏ.எம்.தாஹிர் (ஹாமி), கல்லூரியின் கல்விப்பிரிவுத் தலைவர் ஏ.எல்.நைனா முஹமட் (ஓய்வுபெற்ற அதிபர்) மற்றும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரும், இளைஞர் வலுவூட்டல் , சமூக நலத்திட்டங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான சமாதானத்தூதுவர்கள் அமைப்பின்பணிப்பாளர் ஏ.எஸ்.அரூஸ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் ஆகியோரும் கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இங்கு நடைபெற்ற மாவட்டப்போட்டியில் அஸ்பக் சலஞ்சர் (ஆsspek Challenger) அணியினர் சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டதோடு, சிராஜிய்யா சுப்பர் கிங்ஸ் (Super Kings), அஸ்பக் லெஜண்ட் (Asspek Legend) ஆகிய அணிகள் முறையே 2ம், 3ஆம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர். 



நிகழ்வில், எதிர்வரும் 16, 17ம் திகதி நடைபெறவுள்ள  இளையோர் பந்து பெட்மின்டன் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள சிராஜ் அரபுக்கல்லூரி வீரர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வும் இனிதாய் நடைபெற்றது.



பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு சிறப்பித்த கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப்பணிப்பாளர் யூ.சிவராசா அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.




No comments:

Post a Comment

Post Top Ad