இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மாற்றியமைக்க அரசாங்கம் நட வடிக்கை எடுத்துள்ளது.
ஹலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கு அமைய நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
புதிய திருத்தத்திற்கு அமைய, வெளிநாட்டு மதுபான வகைகளை சில்லறை விலையில் விற்பதற்கான அனுமதியை பெற்றுள்ள மதுபானசாலைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
ஹோட்டல்களுக்கான அனுமதிப்பத்திரத்திற்கு அமைய, காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும், சில ஹோட்டல்களுக்கு அதிகாலை 2 மணி வரையிலும் வெவ்வேறு நேர அட்டவணையின் கீழ் திறந்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய வௌிநாட்டு மதுபான விற்பனை நிலையங்களை காலை 10 மணி முதல் இரவு 09 மணி வரை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment