மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 December 2023

மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று (25-12-2023) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.


இதன்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.


மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்துள்ளனர்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

மேலும் தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி புளோரிடா சிமியோன் நிகழ்வில் சிறப்புரையாற்றியுள்ளார்.


இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad