நீதி அமைச்சினால் இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்குமான திடீர் மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ,நேற்றைய (08-12-2023) ஆம் திகதி நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து கௌரவ நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களினால் 40 புதிய திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே நூற்றுக்கணக்கான மரண விசாரணை அதிகாரிகள் (01-08-2023) யிலிருந்து செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டிருந்ததோடு ,இவர்கள் எதிர்வரும் (15-12-2023) இருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
அந்த வகையில் மட்டக்கப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபை முன்னாள் தவிசாளரும் கலாநிதி திரு VR. மகேந்திரன்(JP), காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்கு ஓய்வு பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் திரு புஹாரி, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு திரு மன்சூர் மற்றும் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்கு திரு பவளகேஸன் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 06 மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment