குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 11 November 2023

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு!

பொத்துவில் பிரதேச செயலகத்தில் உலக உணவுத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு! 

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

உலக உணவுத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் வறிய குடும்பங்களின் நலன் கருதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு  (10)  P/26 கிராம சேவகர் பிரிவில்  பொத்துவில் பிரதேச செயலாளர் M.I.பிர்னாஸ்  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மற்றும் அம்பாரை மாவட்ட  திட்ட மிடல் பணிப்பாளர் H. B. அனீஸ், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இராம குட்டி, கணக்காளர் அப்துல் றகுமான், கிராம நிலதாரி, பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


                              

                                             (சபானா அபூபக்கர்) 

No comments:

Post a Comment

Post Top Ad