கோறளைப்பற்று பிரதேச சபைக்கு Chrysalis நிறுவனத்தின் அனுசரனையுடன் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களை ஒன்றிணைத்து பிரதேச மட்ட ஒருங்கினைப்புத்தளமொன்றினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் கடந்த 2023.11.09ம் திகதி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கோறளைப்பற்று பிரதே சபையின் செயலாளர் ச.நவநீதன், சனசமூக உத்தியோகத்தர் ஏ.ஹாரூன், Chrysalis நிறுவனத்தின் இணைப்பாளர்கள், சனசமூக நிலையத்தலைவர், செயலாளர், பொருளாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது, சன சமூக நிலையங்களை வலுவூட்டுவதற்காக மாவட்ட ரீதியாக வலையமைப்புக்களை உருவாக்குவதற்கான முயற்சியினை உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து Chrysalis நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
அந்த வகையில், பிரதேச சபைக்குட்பட்ட சன சமூக நிலையங்களின் பிரதிநிதிகளிடமிருந்து 9 பேர் கொண்ட குழுத்தெரிவும் இதன் போது இடம்பெற்றது.
செயலாளராக திரு.தினேஷ், தலைவராக திருமதி.உஷாந்தினி, பொருளாளராக திரு.லியாப்தீன்(JP), உபதலைவராக திரு.லத்தீப், உப செயலாளராக திருமதி யோகேஸ்வரி ஆகியோரும் உறுப்பினர்களாக திரு.நிப்ராஸ் (JP), திருமதி தவமலர், திரு.சஜீவன், திரு.முத்துமாதவன் ஆகியோரும் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment