புதிய குரல் பத்திரிகை வெளியீட்டு விழா 29.10.2023 ஞாயிறு பகல் 2.30 மணிக்கு டொரண்டோ பொதுநுாலக ஸ்கார்புரோ சிவிக் சென்ற கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பத்திரிகையின் ஸ்தாபகர் பஹத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் அவர்கள் கலந்து கொண்டார்.
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
விசேட அதிதிகளாக பிரபல வர்த்தகர் றியாஷ் ரவூப், ஐக்கிய இலங்கை சமூக அமைப்பின் தலைவர் பாரீஸ் ஏ.மஜீத், பேராசிரியர் பர்வீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள் உள்ளிட்ட கனடாவின் முக்கியஸ்தர்கள் பங்குபற்றியதோடு முதலாவது பிரதியினை பிரபல வர்ததகர் றியாஷ் ரவூப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் திரு. கிருஷ்ணா, பகவத்சிங் நித்தியானந்தன் ஆகியோர் சிறப்பு உரையாற்றியதோடு வெளியீட்டுரையினை பஹத் ஏ.மஜீத் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து இறுதி நன்றியுரையினை பைஷ் நசீர் செய்தார்.
No comments:
Post a Comment