இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய களஞ்சியப்படுத்தல் முனைய நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட உவைஸ் மொஹமட் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நேற்றைய தினம்(03) அவர் தம்மை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை கையளித்ததாக, ட்விட்டர் என அழைக்கப்பட்ட X சமூக வலைத்தளத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார்.
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் அவர் பதவி விலகியுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சவாலான 14 மாதங்கள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டு, உவைஸ் மொஹமட் ஆற்றிய சேவையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பாராட்டுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment