கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் 28.09.2023 - 30.09.2023 ஆம் திகதி வரை 03 நாட்கள் கொண்ட சாரணர் பயிற்சி முகாம் கல்லூரியில் நடைபெற்றது.
28ம் திகதி பி ப 04.30 மணிக்கு ஆரம்பமான சாரணர் பயிற்சி முகாமினை கல்லூரி அதிபர் கெளரவ எம். ஐ. ஜாபிர் (SLEAS) அவர்கள் ஆரம்பித்து வைத்தார். சாரண பொறுப்பாசிரியர் மேஜர் கே. எம். தமீம் அவர்களது ஒழுங்கமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட இம்முகாமில் சாரண பயிற்றுப்பாளர்களான உதவி மாவட்ட ஆணையாளர் பயிற்சி எஸ். தஸ்தகீர் (ALT), தேசிய பயிற்றுவிப்பாளர் எம். ஏ. சலாம் (ALT) , சாரணர் பயிற்சி குழு உறுப்பினர்களான எம். ஹஸ்மின் புஹாரி (WB), எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் (ASM), டப்லியூ. ஷவ்தப் உசைம் (PS) , எம்.எம்.எம். நூஹ் (PS), ஐ. எம். இஹ்ஜாஸ்(PS), எம். எஸ். எம். அஸ்மான் (PS), எம். எப். எம். பஹாட் (PS), ஆகியோர் கலந்து கொண்டானர்கள்.
குறித்த பயிற்சி பாசறையில் சாரணர்களுக்காக போக்குவரத்து சமிக்ஞைகள், திசைகாட்டி வரைபடம், துனிகர செயற்பாடுகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சம்பந்தமான விரிவுரை, தீப்பாசறை, போதைப்பொருளினை ஒழிப்போம் சம்பந்தமான நடை பவனி, பாத்திரமின்றி சமைக்கும் முறைமை, சாரணர்கள் தங்கியிருக்கும் Hut பரிசோதனை, குறியீடுகள், நில அளவைகள் சம்மந்தமான விரிவுரைகளும் பயிற்சிகளும், கட்டு முறைகள் போன்ற பல செயற்பாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இறுதித்தருவாயில் 03 நாள் பாசறையினை வெற்றிகரமாக முடித்த சாரணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment