"இள வயதில் தலைமைத்துவத்தினை உருவாக்கள்" எனும் தொனிப்பொருளினை அடிப்படையாக கொண்டு கல்முனை அஸ் - ஸுஹாறா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு தலைமைத்துவ மற்றும் ஆளுமை விருத்தி சம்பந்தமான பயிற்சி பட்டறையானது பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யாவின் ஒழுங்குபடுத்தலிலும் மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா வின் அனுசரணையிலும் 2023.10.26 அன்று எக்கோ விலேஜ் ரிசோர்ட் யில் நடைபெற்றது.
இப் பயிற்சி பட்டறையின் பிரதான வளவாளராக கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியரும், மனித மேம்பாட்டு அமைப்பின் ஆலோசகருமான மேஜர். கே. எம். தமீம் கலந்துகொண்டு வளர்ந்து வரும் இளம் தலைவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகள், பிணக்குகளை எவ்வாறான முறையில் தீர்த்துக்கொள்ளல், ஒற்றுமையினால் பெறக்கூடிய நன்மைகள், கேட்டல், கிரேகித்தல் போன்ற ஏராளமான செயற்பாடுகளுடன் கூடிய விரிவுரைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம், அமைப்பின் ஊடக பிரிவுத்தலைவர் என். எம். இம்றி முஹம்மட், பாடசாலையின் ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றதோடு, கலந்து கொண்ட மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment