அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவை ஒன்று கூடல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 11 August 2023

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவை ஒன்று கூடல் !


அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவையின் ஒன்று கூடல் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான எம். எஸ். ஜவ்பர் மற்றும் எம். எஸ். றஜாயா அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (11) காலை  இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. பி. சலீம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ. எல். ஜவ்பர், கணக்காளர் றிபாஸ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ. எல். தெளபீக், பேரவையின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ். எம். அறூஸ் மற்றும் பைசல் இஸ்மாயில் Dr.நக்பர், சிரேஷ்ட எழுத்தாளர் பாலமுனை பாறூக்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உட்பட பலரும் கலந்து  சிறப்பித்தனர்.


செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 


மேலும் இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. புதிய நடப்பு ஆண்டுக்கான நிர்வாகத்தை தெரிவு செய்தல்.


2. தேசிய மீலாத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திறந்த மட்டத்திலான போட்டி நிகழ்ச்சிகளை நடத்துதல்.


3. புதிய கலைஞர்களை அடையாளம் கண்டு இப்பேரவையுடன் இணைத்தல். அத்துடன் பிரதேச மட்டத்தில் காணப்படுகின்ற கலைஞர்களை துறை ரீதியாக அடையாளம் கண்டு அவர்களையும் புதிய விண்ணப்பங்கள் ஊடாக இந்நிகழ்ச்சி திட்டத்தில் உள்வாங்குதல்.


                                            ( சபானா அபூபக்கர் ) 

No comments:

Post a Comment

Post Top Ad