​வீரமுனை படுகொலை 33வது ஆண்டு நினைவு நாள் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 12 August 2023

​வீரமுனை படுகொலை 33வது ஆண்டு நினைவு நாள் !


அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக்கிராமத்தில் புட்டும் தேங்காய்ப்பூவும் போல் இருந்தவர்கள் செய்தி மிகப்பாதகமான செயற்பாடுகள் நடைபெற்று இன்றுடன் (12-08-2023) 33 வருடங்கள் கடந்துவிட்டன.


சுமார் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12வரையில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் வீரமுனையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.இறுதியாக 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் ஆகியவற்றில் தஞ்சமடைந்திருந்த சுமார் 97க்கும் அதிகமானவர்கள் விசேட அதிரடிப்படையின் துணையுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் வெட்டியும் சுட்டும் படுகொலைசெய்தனர்.

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

சிறுவர்கள்,கர்ப்பிணிப்பெண்கள்,முதியவர்கள் என இவ்வாறு கொல்லப்பட்டனர்.இன்று காத்தான்குடியிலும் ஏறாவூரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக கூறி நீதிகோரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கு என்ன சொல்லப்போகின்றார்கள்?


வீரமுனை மக்கள் இன்றும் தமக்கு நடந்த அநீதிகளுக்கான அமைதியாகவே நினைவுகளுடன் கடந்துசெல்கின்றார்கள்.எதிர்காலத்தில் வீரமுனை படுகொலையில் உயிர்நீர்த்தவர்கள்,காணாமல்போனவர்கள் தொடர்பான நூல் உருவாக்கம்பெறவேண்டும் என்பது எனது நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகின்றது.


வீரமுனை என்பது நீண்ட வரலாற்றினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட கிராமமாகும்.சோளர்களின் வரலாற்றுடன் நீண்ட தொடர்பைக்கொண்ட கிராமம். இந்த கிராமத்தினை அழித்து அந்த கிராமத்தின் பொருளாதாரத்தினை முடக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி அன்று தடுக்கப்பட்டது.


இதற்கு உறுதுணையாக அன்று இருந்த இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும் அன்றைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா அண்ணணுக்கு இன்றைய நாளில் வீரமுனை மண்சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Top Ad