தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், கிழக்கு மாகாண ஆளுனரை சந்திப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 11 August 2023

தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், கிழக்கு மாகாண ஆளுனரை சந்திப்பு !

தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுனர் திருசெந்தில் தொண்டமானை கிழக்கு மாகாண ஆளுனரின் திருகோணாமலை அலுவலகத்தில் சந்தித்தனர்.


இச் சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்உதுமாலெப்பைகிழக்கு மாகாண ஆளுனரின்பிரத்தியேக செயலாளர் திரு அணில்கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்பணிப்பாளர் நாயகம் திரு டபிள்யூ.எம்.எச் உதயகுமாரகிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகதிட்டப்பணிப்பாளர் பாயிஸ்தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர்சிமாஸ் மௌலானாசெயலாளர் எம்.எஸ்.பைறுஸ் உட்பட நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.



இச் சந்திப்பின் போது ஆளுனரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.


1. கல்முனை கதுருவெல வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ் ஒன்று 2023.07.09ம் திகதிமன்னம்பிட்டியில் விபத்தை ஏற்படுத்தி அப்பாவி பொதுமக்கள் 11பேர் பலியானதுடன் 40பயணிகளுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது சம்மந்தமாக கிழக்கு மாகாண ஆளுனரினால் விஷேட குழு  நியமிக்கப்பட்டு இது தொடர்பானஉண்மைத்தன்மை வெளியிடுதல்


2. கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முறையற்ற முறையில் வழங்கப்பட்ட13சொகுசு பஸ் வண்டிகளுக்கான அனுமதிபத்திரங்கள்   கல்முனை மேல் நீதி மன்றத்தினால் இரத்துசெய்யப்பட்டது.இந்த விடயமாக கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால்  கொழும்பு மேன்முறையிட்டு நீதிமன்றத்தினால் வழக்கு தொடர்ந்துள்ளமை தொடர்பான விடயம்


3. கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால்  இடம்பெற்று வந்த நிதி மோசடிமற்றும் ஊழல்கள் சம்மந்தமானஆதாரங்கள் வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்காமை.


4. கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முறையற்ற முறையில் வழங்கப்பட்டபஸ் அனுமதிபத்திரங்கள் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரால் இடை நிறுத்தப்பட்ட பஸ் வண்டிகளின்அனுமதிபத்திரங்களை சென்ற 2023.07.23ம் திகதி அன்று தவரான முறையில் நீடித்து கொடுக்கப்பட்டது


5. கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும்ஊழல்,மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ்சங்கம் கோரிக்கை விடுப்பதனால் தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் சங்கத்தை கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் தொடர்ச்சியாக பழிவாங்கும் செயல்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.


மேற்படி விடயங்களை கேட்டரிந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் திரு செந்தில் தொண்டமான் கிழக்குமாகாண பிரதம செயலாளர்,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்,கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி தென்கிழக்கு கரையோர தனியார்பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் திரு செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad