பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 5 August 2023

பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு !


வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள்,பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விதவைகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதலானோர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு 3500/= ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கும் நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (04/08/2023) இடம்பெற்றது.



தம்பலகாமம்  பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி தலைமையின் கீழ் இடம் பெற்ற  இந்நிகழ்வில் கிண்ணியா , தம்பலகாமம், கந்தளாய் போன்ற பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய சுமார் 1834 குடும்பங்களுக்கு இவ் வவுச்சர் வழங்கி வைக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட விழிம்பு நிலை வாழ் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. வறுமையை ஒழிக்கும் நோக்கமாக கொண்ட ஒரு திட்டமாக பெரண்டினா மூலம் இச்செயற்பாடு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.


இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள நாம் உள்ளூர் உற்பத்திகளை அதிகம் நுகர வேண்டும் பல்வேறு வகையான பொருட்களை வெளிநாட்டில் இருந்து கொண்டே பெறுகின்றோம். வாசனை திரவியங்கள், ஆடைகள் போன்றன வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நமது நாட்டின் உற்பத்தித்துறை வீழ்ச்சி காண்கின்றது. இதை விடுத்து பல உற்பத்திகளை நாமே இங்கு உற்பத்தி செய்வோமானால் தங்களை வளப்படுத்தி முன்னேற்றமடையலாமெனக் கூறினார்.


இந்நிகழ்வில் பெரண்டினா நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் பி.எம்றகீம், பிராந்திய முகாமையாளர் திருச் செல்வம்,கிளை முகாமையாளர்,பொலிஸ் அதிகாரி,விவசாய போதனாசிரியர்,இலங்கை வங்கி ஊழியர்  உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad