தயவு செய்து உண்மையை பேசுங்கள் - உலக வங்கி இலங்கையிடம் முன்வைத்த கோரிக்கை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 July 2023

தயவு செய்து உண்மையை பேசுங்கள் - உலக வங்கி இலங்கையிடம் முன்வைத்த கோரிக்கை !


பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என  நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹெடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையை அவ்வாறே மக்களுக்குத் தெரியப்படுத்தி முன்னோக்கி செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் கருத்துத் தெரிவித்த பரிஸ் ஹெடாட் சர்வோஸ்,


"இலங்கை தற்போது எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.” ஆனால் இந்த முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டும்.


தற்போதைய வேலைத்திட்டத்தை அப்படியே தொடர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் முக்கியமானது. தயவு செய்து உண்மையை பேசுங்கள், இப்போது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல, சரியானதை செய்ய வேண்டிய நேரம்.


“இலங்கை மீண்டும் தலை தூக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது." என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad