வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 July 2023

வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு !

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டாம் வருட மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக வே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலில் காயமடைந்த இரண்டாம் வருட மாணவன் ஒருவர் திங்கட்கிழமை(17) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இரண்டாம் வருட மாணவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (18) விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad