ஆத்துசேனை விவசாயிகள் அமைப்பு அமைச்சர் நஸீர் அஹமட் எம்பிக்கு நேரில் நன்றி தெரிவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 July 2023

ஆத்துசேனை விவசாயிகள் அமைப்பு அமைச்சர் நஸீர் அஹமட் எம்பிக்கு நேரில் நன்றி தெரிவிப்பு !

கோறளைப்பற்று மேற்கு , ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட ஆத்துச்சேனை, கிடச்சிமடு கிராம வீதிகள் மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்ற நிலையில் மக்கள் பயணிக்க முடியாது  குன்றுங்குழியுமாகக் காணப்பட்டது. 


இதனால் அப்பகுதியில் அதிகளவான விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகள் தினம் தோறும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். 


இவைகளைக் கருதிற்கொண்டு அமைச்சர் நஸீர் அஹமட்  அவர்களிடம் மக்கள்  விடுத்த கோரிக்கைக்கமைவாக 12 கோடி ரூபாய் செலவில் இவ்வீதிகளின் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றது. 


இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்த ஆத்துசேனை விவசாயிகள் அமைப்பினர் நன்றி தெரிவித்ததுடன், இவ்வீதிகளின் எஞ்சியுள்ள பகுதிகளையும் பூர்த்தி செய்து தருமாறும் இப்பகுதிகளில் காணப்படும் கிராமிய பாலங்களை நிர்மானித்து மின்சாரம், தொழில் முயற்சிகளை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

       

                                         ( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ) 


No comments:

Post a Comment

Post Top Ad