அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (20) பிரதேச விவசாய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் எம். ஐ. பாயிஸ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீட், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஹமீட், பாலமுனை விவசாய கல்லூரி அதிபர், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகளினால் முன்மொழியப்பட்ட பிரச்சினைகளுக்கு, துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகளினால் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment