சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாச்சார நிகழ்வும், கருத்துக்களமும் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 July 2023

சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாச்சார நிகழ்வும், கருத்துக்களமும் !


மனித அபிவிருத்தி தாபனத்தினால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் கனடா பங்காளர் நிறுவன அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டம் (NLEAP)அம்பாறை மாவட்டத்தில் சகவாழ்வுச் சங்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு அங்கமாக சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாச்சார நிகழ்வும், கருத்துக்களமும் கல்முனை கிரிஸ்டா இல்லத்தில் மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட உதவி இணைப்பாளர் எம்.ஐ. றியால் தலைமையில் இன்று (13) நடைபெற்றது. 


கலாச்சார நிகழ்வுகளுடன் கூடியதாக நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அப்துல் அஸீஸ் உட்பட பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், இளைஞர் சமூக அமைப்புக்களின் பிரதானிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், மத போதகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 


இத்திட்டத்தின் ஊடாக சகவாழ்வு சங்கங்களின் இயலுமையை மேம்படுத்தி அதன் ஊடாக மொழி உரிமைகள், மொழிக்கொள்கை அமுலாக்கம், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தல் போன்றவற்றை இலக்காக கொண்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 



இந்நிகழ்வானது பல்லின சமூகங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும், பிராந்தியத்தில் சமூக ஒருமைப்பாடு, இரண்டாம் மொழி கல்வியின் முக்கியத்துவம், மொழிக்கொள்கை அமுலாக்கத்தின் நிலமைகள் தொடர்பான கருத்துக்களமாகவும் நடைபெற்றது.



                                      ( நூருல் ஹுதா உமர் ) 

No comments:

Post a Comment

Post Top Ad