ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாகி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயம் !
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைதுப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சிய பொறுப்பாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு வீதி ரோந்து கடமைக்காக வழங்கப்பட்டிருந்த கைதுப்பாக்கியை சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணிக்கு கடமையை முடித்துக்கொண்டு அந்த கைதுப்பாக்கியை ஆயுத களஞ்சி பொறுப்பாளரிடம் வழங்க முற்பட்டபோது தவறுதலாக கைதுப்பாக்கி வெடித்ததில் களஞ்சிய பொறுப்பாளரின் காலில் துப்பாக்கி சூடு பட்டு படுகாயமடைந்த அவர் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment