திருமலையில் லொறி தடம்பிரண்டதில் விபத்து ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

திருமலையில் லொறி தடம்பிரண்டதில் விபத்து !

​திருமலையில் லொறி தடம்பிரண்டதில் விபத்து ! 


திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் பகுதியில் வைத்து உமி மூடைகளை ஏற்றிவந்த லொறியொன்று தடம்பிரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அம்பாறையிலிருந்து உமி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு பயணித்த லொறியே இவ்வனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad