நடிகர் மனோபாலா காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்...!!
தயாரிப்பாளரும், பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர் கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.
கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மரணம் அடைந்தார். தமிழ் சினிமா உலகை அவரின் மரணம் உடைத்து போட்டுள்ளது.
எல்லோருடனும் அன்புடனும், நட்புடனும் இருப்பவர் நடிகர் மனோபாலா. சினிமா உலகில் மிகவும் நல்ல பெயர் கொண்டவர் இவர்.
அப்படிப்பட்ட மனோபாலாவின் மரணம் சினிமா உலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment