இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 May 2023

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி !

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி !

 

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி குறித்து ரோய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (04.05.2023) வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தவருடம், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கையின் உயர் மட்ட தொழில் நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி அந்த செய்தி கூறியுள்ளது.

அத்துடன், சர்வதேசத்தில் தேவை குறைவடைந்துள்ளதால், தெற்காசிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. ஆடை, இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறையில் ஒன்றாக உள்ளது. கடந்த வருடம் ஆடை ஏற்றுமதி மூலம் 5.95 பில்லியன் டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் ரோய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் ஆடை தொழில்துறையின் செயல்திறன் மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 13.8 சதவீதம் குறைந்து 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad