முன்னாள் உலக சாம்பியனான போவி 32 வயதில் காலமானார் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 May 2023

முன்னாள் உலக சாம்பியனான போவி 32 வயதில் காலமானார் !

முன்னாள் உலக சாம்பியனான போவி 32 வயதில் காலமானார் ! 


முன்னாள் 100 மீட்டர் உலக சாம்பியனான டோரி போவி தனது 32 வயதில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டோரி போவி, 2017 இல் உலக சாம்பியனாக சாதனை படைத்திருந்ததுடன், 2016 இல் ரியோ விளையாட்டுப் போட்டிகளில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்றார்.

"டோரி போவி காலமானார் என்ற சோகமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் துக்கத்திற்கு ஆளாகிறோம்" என்று ஐகான் நிர்வாகம் ட்விட்டரில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


இதேவேளை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கால்வின் டேவிஸ் தனது 51வது வயதில் காலமானார் என்று உலக தடகளப் போட்டியின் நிர்வாகக் குழு புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டேவிஸ் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.

மேலும் 1995 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணியின் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad