பிரன்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், அலுவலக திறப்பு விழாவும் !
அட்டாளைச்சேனை பிரன்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு மற்றும் அலுவலக திறப்பு விழா கடந்த சனிக்கிழமை (08/04/2023 ) கழகத்தின் தலைவர் பி.எம்.றிம்ஸான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக இது அவரை காலமும் சிறப்பாக தனது சேவையை வழங்கி தற்போது இடமாற்றம் பெற்று செல்லும் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம் அஸ்வத் அவர்களை கழகத்தின் சிரேஸ்ட்ட வீரர் எம்.அஸ்லம் மற்றும் கழகத்தின் செயளாலர் எம்.எம்.றிஸ்வான் இனைந்து அவரின் சேவையைப் பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தனர்.
இதன்போது கழகத்தில் புதிதாக இனைந்து கொண்ட வீர்ர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தின் புதிய விளையாட்டு உத்தியோகத்தரான ஏ.இம்றுபாஸ்கான் அவர்களினால் கழகத்தின் சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்களான எம்.எச்.எம் அஸ்வத் மற்றும் ஏ. இம்றுபாஸ்கான் அட்டாளைச்சேனை 1ம் பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் எஸ்.எச் முர்ஸித் மற்றும் கழகத்தின் ஆலோசகர்களான எ.சி.ரிசாட் , எ.ஹமீட் (JP) மற்றும் கழகத்தின் உறுப்பினர் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment