சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் கல்குடா பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 April 2023

சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் கல்குடா பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு !

சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் கல்குடா பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு ! 



சுற்றாடல் அமைச்சர் நசீர் அவர்களுடனான சந்திப்பு  அமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்தில் நேற்று  (09.04.2023) மாலை இடம்பெற்றது . 


இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக காணப்படுகின்ற முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும்,மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது



கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எவ்வித செயல்பாடுகளையும்மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டதுஅதனை அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஅவர்களுடன் இணைந்து தற்போது நாம் நாட்டை மீளகட்டியெழுப்பும்  முயற்சியில் வெற்றி கண்டுசெல்வதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்த அவர்எதிர்வரும் காலங்களில் எமது மக்களின்பிரச்சினைகளுக்கு அரசுடன் இணைந்து தீர்வுகளையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் என்றும்நம்பிக்கை வெளியிட்டார்


இதன் போது கல்குடா பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் தமதுகருத்துக்களை தெரிவித்தனர்இதன் போது கல்குடாவின் அரசியல் செயல்பாட்டாளரும்புத்திஜீவியுமான YSO ஹனிபா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போதுகௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல்அமைச்சருமான  நஸீர் அஹமட் அவர்கள் கொரோனா காலத்தில் மரணித்த முஸ்லிம் சகோதரர்களின்உடல்களை அடக்கம் செய்யும் முயற்சியில் ஓட்டமாவடியில் அமைந்துள்ள மஜ்மா நகரில் அமைந்துள்ளகொரோனா மையவாடியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பாகவும்அங்கு கலந்து கொண்ட மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்தனி மனிதனாக இருந்து கொண்டுமட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் அடக்கம்செய்வதற்கு தற்போது உள்ள சுற்றாடல் அமைச்சர் மேற்கொண்ட தியாகங்கள் பலவற்றை இங்கு குறிப்பிட்டார்


சாதுரியமாகவும்சமயோசித்தனமாகவும் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி அளித்திருப்பதாகவும் இங்கு அவர்சுட்டிக் காட்டினார்இலங்கையில் எத்தனையோ இடங்களில் ஜனாஸாக்கள் அடக்க முடியும் என்று ஒவ்வொருஅரசியல்வாதிகளும் குறிப்பிட்டு இருந்தாலும்தனி மனிதனாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிபிரதேசத்தில் அவ்ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அமைச்சர் மேற்கொண்ட முயற்சி மிகவும் போற்றத்தக்கது


ஆனால்சமூக ஊடகத்தில் அவர்கள் மேற்கொண்ட விடயங்களை சிலர் தங்களது அரசியல் லாபங்களுக்காகஅதனை ஏளனம் செய்து அதனை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்றமை உண்மையிலேயே வேதனைக்குரியவிடயமாகும்


மேலும் அவர் குறிப்பிடும் போது குறிப்பாக ஏறாவூரை சேர்ந்த மரணித்த சகோதரி அசனத்தும்மா மற்றும் கலில்சேர் ஆகியோரின் முதலாவது ஜனாஸாக்களை அவரே தனி மனிதனாக கொழும்பிலிருந்து கொண்டு வந்து எமதுபகுதியில் அடக்கம் செய்தார்அச்சந்தர்ப்பத்தில் அவர் செய்த அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதற்கு அண்ணாருடன் தொடர்பில் இருந்தேன் என்ற வகையில் இச்சந்தர்ப்பத்தில் நான் சாட்சி பகிர்கின்றேன் என்றுஅவர் கூறினார்


இச்சந்தர்ப்பத்தில் கல்குடா பிரதேசத்தில் இருந்து கலந்து கொண்ட ஆதரவாளர்கள் தமது நன்றிகளையும்எத்தடைகள் வந்தாலும் அனைத்து சவால்களையும் தாங்கள் வெற்றி கொள்ள வேண்டும் என்றும் கௌரவசுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களிடம் வினையமாக வேண்டிக் கொண்டனர்.

      

                                              ( எஸ்..எம்.நிப்ராஸ் ) 

      

No comments:

Post a Comment

Post Top Ad