மனித மேம்பாட்டு அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு !
மனித மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபகர் எஸ். ஏ. எம். அஸ்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களின் ஆலோசனையின் பெயரில் வருடாந்த இப்தார் நிகழ்வானது இம்முறை மெட்ரோ பொலிட்டன் கல்வி நிறுவனத்துடன் இணைந்து சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மன்டபத்தில் நேற்று (2023.04.16) நடைபெற்றது .
அமைப்பின் ஆலோசகரும், மெட்ரோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தினுடைய தவிசாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டமுதுமாணி. அல் ஹாஜ். ரவூப் ஹக்கீம் (பா. உ) கலந்து சிறப்பித்தார்.
இதன் போது அமைப்பினுடைய உயர்பீட உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களின் அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment