இன்றைய வானிலை முன்னறிவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 March 2023

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

​இன்றைய வானிலை முன்னறிவிப்பு ! 




நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூரப்பட்டுள்ளது.


இன்றைய தினத்திற்கான காலநிலை அறிவிப்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.


மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad