பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 March 2023

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !



தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதாரம் மற்றும் கல்வி  அமைச்சுக்கள் வெளியிட்டுள்ளன.

அதிக வெப்பநிலையுடனான காலநிலையை எதிர்கொள்ளும் போது, வியர்வை மற்றும் உமிழ்நீரை வெளியேற்றுவதால், தசைப்பிடிப்பு, அதிக சோர்வு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிக வெப்பநிலையுடனான நாட்களில், இல்ல விளையாட்டு போட்டிக்களை நடத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைவேளை நேரங்களில் வெளி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களிடம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக குடிநீரை அருந்தவும், அதிக சோர்வு நிலையை போக்க இரண்டு சிறு ஓய்வு காலங்களை வழங்குவது சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad