40 அரச நிறுவனங்களை மூட தீர்மானம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 March 2023

40 அரச நிறுவனங்களை மூட தீர்மானம் !

40 அரச நிறுவனங்களை மூட தீர்மானம் !



பொது மக்களுக்கான சேவைகள் , குறைந்த மட்டத்தில் காணப்படும்  40 அரச நிறுவனங்களை   மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் . 


சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். அத்துடன்  நிறுவனங்கள் பல ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாலும் இந்த தீர்மானம் எடுக்க பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 


செலவுகளை முகாமைத்துவம் செய்தல், வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை  இதனூடாக அடைய எதிர்பார்த்துள்ளதாகவும், இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad