‘லீடரின் புலமை மொட்டுக்கள்’ சாதனையாளர்கள் பாராட்டு விழா நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 19 March 2023

‘லீடரின் புலமை மொட்டுக்கள்’ சாதனையாளர்கள் பாராட்டு விழா நிகழ்வு !

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய "லீடரின் புலமை மொட்டுக்கள் சாதனையாளர்கள் பாராட்டு விழா" நிகழ்வு


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய "லீடரின் புலமை மொட்டுக்கள் சாதனையாளர்கள் பாராட்டு விழா" நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் விமர்சையாக மாணவர்கள் மற்றும் கிழக்கிலங்கை கலைஞர்களின் கலை நிகழ்வுகளுடன் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 


இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறுகிய காலத்தில் கல்முனை கல்வி வலயத்தில் குறித்த இப்பாடசாலை அடைந்துள்ள வரலாற்று சாதனைகள், பாடசாலையின் கல்வி மற்றும் கல்விசாரா ஏனைய சாதனைகள் அடைவுமட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றினார். 



தொடர்ந்தும் பாடசாலையில் உள்ள பௌதீக வளங்களை மேம்படுத்த அரச நிதிகளை மட்டும் நம்பிக்கொண்டிராமல் பழைய மாணவர்கள், தனவந்தர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை கொண்டும் நலன்விரும்பிகளை கொண்டும் எவ்வாறு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு பிரதேச மும்மாதிரிகளை எடுத்துக்காட்டி பேசினார். 


தரம் ஐந்து புலமை மொட்டுக்கள் பாராட்டப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை கல்விமாவட்ட பொறியலாளர் ஏ.எம். ஸாகீர் கௌரவ அதிதியாகவும்,  வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியலாளர் எம்.எம்.எம். முனாஸ், கல்முனை கல்விவலய உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலிக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் மேலும் பல கல்வி அதிகாரிகள், சாய்ந்தமருது, கல்முனை கோட்டங்களின் ஏனைய பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், வர்த்தகர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



                                         ( நூருல் ஹுதா உமர் )

No comments:

Post a Comment

Post Top Ad