இலங்கையில் பரவும் நோய் அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான தகவல் !
இலங்கையில் பரவும் லிஸ்டீரியா (Listeria) என்ற நோய் பற்றி அனாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
லிஸ்டீரியா என்பது ஒரு வரை பக்டீரியாவாகும். கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் இந்த பக்டீரியா தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் அவர் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.
சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்ட மூன்று பேர் இதற்கு முன்னர் உயிரிழந்தார்கள். ஆனால் இவர்களுகு இந்த நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தொடர்பான வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.
இதேவேளை, சிவனொளிபாதமலையில் உள்ள வர்த்தகத் தொகுதிகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லிஸ்டீரியா என்ற பக்டீரியா தொற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோயாக இது பரவுவதில்லை என்றும் இதனால் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment