பசறை விபத்தில் ஆசிரியர் பலி !
பசறை 13 ஆம் கட்டை பகுதியில் கார் ஒன்று சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று காலை 7.20 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹொப்டன் பகுதியில் உள்ள பாடசாலை கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியர் தனது வீட்டிலிருந்து இன்று காலை கடமைக்காக சென்று கொண்டிருந்த போதே கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆசிரியரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment