நீர்வீழ்ச்சிக்கு சென்ற கிழக்கு இளைஞர்கள் மாயம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 21 March 2023

நீர்வீழ்ச்சிக்கு சென்ற கிழக்கு இளைஞர்கள் மாயம் !

நீர்வீழ்ச்சிக்கு சென்ற கிழக்கு இளைஞர்கள் மாயம் !


வெல்லவாய பிரரேசத்திலுள்ள எல்லேவெல நீர்வீழ்ச்சிக்குக் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நால்வர் இன்றுகாலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நால்வரும் நீர்வீழ்ச்சிக்கு குழுவாக சேர்ந்து சுற்றுலாப்பயணம் சென்றதாக தெரியவருகிறதுகாணாமல் போன 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருதுபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு குறித்த இளைஞர்கள் நீராட சென்றதாக தெரியவந்துள்ளதுஅங்கிருந்த குடியிருப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்தும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தஇளைஞர்கள் ஆபத்தான பகுதியில் குளித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொலிஸ் மீட்புப் பணியாளர்களும் பிரதேசவாசிகளும் காணாமல் போன இளைஞர்களைக் கண்டுபிடிக்கும்பணியில் ஈடுபடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad