சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை இளைஞர் கழக சம்மேளனத்தினால் சிரமதான நிகழ்வு !
இலங்கை நாட்டின் 75”வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுத்தமான மற்றும் பசுமை நகரம் இலங்கை" என்ற தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை இளைஞர் கழக சம்மேளனத்தினால் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக இன்று 2023 பெப்ரவரி 04 அட்டாளைச்சேனை கடற்கரையில் சிரமதான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவரும், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன செயலாளருமான அப்துல் கரீம் முஹம்மட் றிப்கான் அவர்களின் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சர்பான், இளைஞர் சேவை அதிகாரி முஹம்மத் றியாத் (YSO), பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து இந்நிகழ்வை சிரப்பாக நடாத்தி முடித்தனர்.
No comments:
Post a Comment