இலவச கண் பரிசோதனையும் மூக்கு கண்ணாடி வழங்கல் நிகழ்வும் !
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபையின் சமூக அபிவிருத்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச கண் பரிசோதனையும் மூக்கு கண்ணாடி வழங்கல் நிகழ்வும் நேற்று 09.02.2023 வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் கனகரெட்னம் கமலநேசன் அவர்களின் தலைமையில் சபையின் செயலாளர் சன்முகம் நவநீதன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா ஹாரூன் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் மட்டக்களப்பு Leo கழகத்தின் அனுசரனையுடன் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள் மக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பரிசோதனை முகாமில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு இலவசமாக மூக்குகண்ணாடி வழங்கியதுடன் கண்ணில் வெண் படலம் நோய் கண்டறியப்பட்ட 22 பேருக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினூடாக சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தலைவர் கே.லோகேந்திரன் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சிரேஷ்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுரேஷ் றொபட், Leo கழகத்தின் தலைவர் பிரஷாந்தன் மற்றும் அதன் உறுப்பினர்கள், பிரதேசசபை உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் )
No comments:
Post a Comment