நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 February 2023

நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல !

நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல ! 


தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மற்றும் பல சர்வதேச வங்கி கணக்குகள் இருப்பதாகவும், உகாண்டாவுக்கு பணம் அனுப்பியதாகவும் தம்மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் இவ்வாறு தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூறப்படுகின்ற பொய் என்றும், உண்மையில் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடமும் நாட்டிடமும் ஒப்படைக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad