QR முறை நீக்கம், எரிபொருள் விலையில் மாற்றம் !
எதிர்வரும் ஓரிரு தினங்களில் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ள அதேவேலை, எதிர்வரும் 10ம் திகதியுடன் எரிபொருள் பெருவதற்கான QR முறையினையும் நீக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்படி, சிலவகையான எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று அறியமுடிகிறது.
உலக சந்தையில் எரிபொருளுக்கான விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கின்றன.
இந்த நிலையில் இலங்கையிலும் அதற்கேற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க உத்தேசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment