தேர்தலை நடத்த ஐ.நா.வை தலையிடுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை !
உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் வேண்டுமென்றே ஒத்திவைப்பதாகவும் தேர்தலை நடத்த ஐ.நா. தலையிட வேண்டுமெனவும் மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கின்றது.
அந்தக் கோரிக்கையுடன் கூடிய கடிதம், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் கையளிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகளின் தூதரகத்துக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment