கட்டுப்பணம் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 21 February 2023

கட்டுப்பணம் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு !

கட்டுப்பணம் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு ! 



மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத் தொகையை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad