பசி காரணமாக ஒன்றரை வயது குழந்தை மற்றும் 7 வயது சிறுவன் மரணம் !
இரத்தினபுரி கரபிஞ்ச பகுதியில் ஒன்றரை
வயது குழந்தையும் 7 வயது சிறுவனும்
உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ள
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது!
இதனையடுத்து இவர்களை நேற்று பிற்பகலில் இருந்தே காணவில்லை என சிறுவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கரபிஞ்ச காட்டுப் பகுதியில் வசித்து வரும் இவர்கள் ஒன்றரை வயது குழந்தையும் 7 வயது சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தைகளின் உறவினர்கள் குழந்தைகளை கண்டதையடுத்து சிறுவர்கள் பசி மயக்கத்தில் உள்ளனர் என்றும் பின்னர் இறந்துள்ளனர் என்றும் உறவினர்களிடம் தாயார் தெரிவித்துள்ளார்.
இதன்போது சிறுவர்கள் உயிரிழந்த இடத்திலே தாயாரும் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலீசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment