நபரொருவர் மீது பொலிஸாரால் கொடூர தாக்குதல் !
நபரொருவர் மீது கிராண்ட்பாஸ் பொலிஸார் மனிதாபிமானமற்ற தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக காயமடைந்த அவர் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது உடல் முழுவதும் காயங்கள், கை முறிவு மற்றும் காலில் 2 அடி தையல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை வாபஸ் பெறுமாறு குறிப்பிட்ட தரப்பினர் அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நபரே இத்தேர்தலில் சுயேச்சைக் குழுக்களை வேட்பாளர்களாக நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment