சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நேற்று (15) இரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குழுவிற்கும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றைய மாணவர்கள் குழுவிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment