1,508 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர்!
கல்பிட்டியில் கடத்தப்பட்ட 1,508 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரால் நேற்று கல்பிட்டி, அனவாசல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தப்பட்ட 1,508 கிலோகிராம் பீடி இலைகளை மாற்றுவதற்கு தயாரான லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மூன்று சந்தேக நபர்களும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, SLNS விஜயா மூலம் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
பீடி இலைகள் 48 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும், 39 பொதிகளில் 744 கிலோகிராம் புகையிலை மற்றும் 8 பொதிகளில் 129 கிலோகிராம் புகையிலை தூள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் 29 மற்றும் 36 வயதுடைய கலேவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment