அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை வேண்டி கிழக்கின் கேடயம் பிரதானியின் ஒருங்கமைப்பில் புதிய அரசியல் கூட்டணி உருவாகிறது !
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டு எதிர்வரும் வாரத்தில் வேட்புமனுவை கோரியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களும்
தேர்தல் கூட்டுக்களையும், அரசியல் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக அரசியலில் அடிப்படையிலிருந்து மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் கிழக்கின் கேடயம் பிரதானியின் புதிய அரசியல் கூட்டணி ஒன்றினை உருவாக்கி கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடும் வேலைகளை ஆரம்பித்துள்ளது. அதனடிப்படியில் கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸின் புதிய அரசியல் கூட்டணி ஒன்றினை உருவாக்கும் முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும், ஏனைய சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அறிய முடிகிறது.
அண்மைக்காலத்தில் அம்பாறை மாவட்டம் தாண்டி கிழக்கு மாகாணம் முழுவதும் சிறுபான்மை மக்களின் தேவைகளை முன்னிறுத்தி எஸ் எம் சபீஸ் தலைமையிலான கிழக்கின் கேடயத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இதை மையமாக கொண்டு கல்விமான்கள், இளைஞர்கள் அடங்கிய குழுவினர் இந்த புதிய அரசியல் கூட்டணியில் எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்க தயாராகி வருகின்றனர்.
(நூருல் ஹுதா உமர்)
No comments:
Post a Comment