தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்று காலை 5 இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது என தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாத்தறை பிரதேசத்தில் இருந்து இன்று (06) வருகை தந்த 500,000 வது பார்வையாளரை வரவேற்று ரிக்கெட் வழங்கப்பட்டதுடன், அவருக்குப் கண்ணாடியில் அமைக்கப்பட்ட தாமரைக் கோபுர நினைவு பரிசலும் வழங்கப்பட்டது.
பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 4,083 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment