அட்டாளைச்சேனை தவிசாளர் வேட்பாளராக ஏ.எஸ்.எம்.உவைஸ் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 5 January 2023

அட்டாளைச்சேனை தவிசாளர் வேட்பாளராக ஏ.எஸ்.எம்.உவைஸ் !


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்கத்தக்க தேர்தலுக்கான தயார் நிலையில் கட்சியில் இருந்து வருகின்றன.


அட்டாளைச்சேனை பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக கைப்பற்றி வந்த நிலையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.


தற்போதுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபை மக்களுக்கான ஆக்கபூர்வமான எந்த செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


பிரதேச சபை உறுப்பினர்கள் மீது மக்களின் அதிர்ப்தி கட்சியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.


இவற்றைக் கருத்தில் கொண்டு கட்சி மாறாத கட்சிக் கொள்கை உடைய மூன்று முறை பிரதேச சபை உறுப்பினராக பணியாற்றுகின்ற ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்களை தவிசாளர் வேட்பாளராக களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.


பிரதேச சபை உறுப்பினர் உவைஸ் அவர்கள் ஒவ்வொரு தடவைகளும் தவிசாளராக நியமிக்கப்படும் சந்தர்ப்பங்களில் கட்சியின் நலன் கருதி தலைமையின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து மூன்று முறை தியாகம் செய்துள்ளார்.


இம்முறை இவருக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பதில் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் போராளிகளும் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.


இது தொடர்பாக அட்டாளைச்சேனை மத்திய குழுவும் கட்சித் தலைமையும் பச்சைக் கொடி காட்டியுள்ளாத கூறப்படுகின்றது.

            

                                         ( எம்.முர்ஷித் அகமட்)

No comments:

Post a Comment

Post Top Ad