அட்டாளைச்சேனையில் மரக்கன்றுகள் , விதைகள் வழங்கி வைப்பு !
உணவு பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் தேசிய மீனவர் பேரவையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய மீனவர் பேரவையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் நஜீகா முஸப்பீர் தலைமையில் நேற்று (3) பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
மேலும் சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஹமீட், அபிவிருத்தி உத்தியோகத்தர் சாஹீறா, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் சபானா உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment