​அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சார்பாக மற்றுமோர் மாணவன் பொலிஸ் கடேற் சார்ஜனாக பதவியுயர்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 January 2023

​அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சார்பாக மற்றுமோர் மாணவன் பொலிஸ் கடேற் சார்ஜனாக பதவியுயர்வு !

அட்டாளைச்சேனை  தேசிய பாடசாலை சார்பாக மற்றுமோர் மாணவன் பொலிஸ் கடேற் சார்ஜனாக பதவியுயர்வு! 


பாதுகாப்பு அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை மாணவர்களை ஆளுமை உள்ளவர்களாக ஆக்குவதுடன் அவர்களை “நாட்டுக்கு சிறந்த பிரஜைகளாக மாற்றி அமைத்தல்” எனும் தொனிப்பொருளில் நடாத்திக்கொண்டிருக்கும் கடேற் பயற்சி நெறிக்கு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும்  ஜாபீர் ருஸ்திப்  அகமட் எனும் மாணவன் தெரிவு செய்யப்பட்டார்.


இம்மாணவன் இலங்கையில்  500 பாடசாலைகளில் இருந்து ஒருவராக இலங்கை பொலிஸ் கடேற் சார்ஜனாக தெரிவு செய்யப்பட்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் பயிற்சிப்பாடசாலையான பொரளந்தை பொலிஸ் பயிற்சிப்பாடசாலையில் கடந்த 07/01/2023 தொடக்கம் 13/01/2023 வரையான காலப்பகுதியில் வெற்றிகரமாக பயிற்சி பெறறு அதன் மூலம் தேசிய தரத்திலான  சான்றிதழினையும் பெற்று  தனது  பாடசாலைக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளார். 


No comments:

Post a Comment

Post Top Ad