கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து புத்தகப்பைகள் வழங்கி வைப்பு...! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 January 2023

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து புத்தகப்பைகள் வழங்கி வைப்பு...!

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 2007 க.பொ.த.சாதாரண தரம்,2010 க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து புத்தகப்பைகள் வழங்கி வைப்பு...!




மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் அம்பாரை  மாவட்டம் கல்முனை வலய  கல்வி பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் கல்வி கற்க்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக இலவசமாக புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது. 


கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 2007 கல்விப் பொது தர சாதாரண தரம் 2010 கல்விப்பொது தர உயர் தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம்,கல்முனை இராமகிருஸ்ண மிஷன் மகா வித்தியாலயம்,சாய்ந்தமருது ரியாழுள் ஜன்னா வித்தியாலயம்,

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயம் என்பவற்றுக்கு மேற் குறித்த சாஹிரா தேசிய பாடசாலையில் 2007 க.பொ.த.சாதாரண தரம் 2010 க.பொ.த.உயர் தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலை அதிபர்களிடம் புத்தகப்பைகளை இன்று (13) வழங்கி வைத்தனர்.


நான்கு  பாடசாலைகளுக்கும் மொத்தமாக 125 புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





                                       ( எம்.என்.எம்.அப்ராஸ்)   

No comments:

Post a Comment

Post Top Ad